search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியா பவானிசங்கர்"

    கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. #KadaikuttySingam
    கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் விவசாயம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா இன்று நடந்தது. இதில் இயக்குநர் பாண்டிராஜ், படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா, கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சரவணன், சூரி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், யுவராணி, மௌனிகா, இளவரசு மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.



    இதில் தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது மேம்பாட்டுக்காக ரூ.1 கோடியை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். மேலும் விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. #KadaikuttySingam

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் சின்னபாபு படத்தின் வெற்றி விழாவுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி ரசிகர்களை வியக்க வைத்தார். #Karthi #KadaikuttySingam
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். சத்யராஜ், பிரியா பவானிசங்கர், அர்த்தனா, சூரி, விஜி சந்திரசேகர், இளவரசு, மாரிமுத்து, சரவணன், ஸ்ரீமன், பானுப்ரியா, மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மக்கள் குடும்பத்துடன் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்கின்றனர். 

    இந்த படம் தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகியது. தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில், படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் கார்த்தி ஐதராபாத் சென்றார். அப்போது மழையின் காரணமாக அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், சரியான நேரத்திற்கு விழாவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 



    இதையடுத்து நடிகர் கார்த்தி மற்றும் படத்தின் தெலுங்கு வெளியீட்டாளர் உள்ளிட்ட பலரும் ஆட்டோ பிடித்து விழா நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். கார்த்தி ஆட்டோவில் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை கார்த்தி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karthi #KadaikuttySingam

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #KKS #KadaiKuttySingam #Karthi
    விவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த பந்தங்களின் பிணைப்பை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. 

    சத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிடுவதால், தனக்கு பிறகு குடும்பத்தை காக்க ஒரு ஆண் சிங்கம் வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சத்யராஜ். சத்யராஜின் மனைவி விஜி, தனது தங்கை பானுப்பிரியாவையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளச் சொல்ல, சத்யராஜும் பானுப்பிரியாவை திருமணம் செய்கிறார். அவர்களுக்கும் ஒரு  பெண் குழந்தை பிறக்கிறது. 



    இதற்கிடையே இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்ட சத்யராஜின் முதல் மனைவி விஜி, கார்த்தியை பெற்றெடுக்கிறார். அதேநேரத்தில் சத்யராஜ் - விஜியின் மகள் வயிற்றுப் பிள்ளையாக சூரி பிறக்கிறார். இருவரும் மாமன், மச்சானாக வளர்கின்றனர். 

    10-வது படிப்பை முடித்த கார்த்தி விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு விவசாயியாக வலம் வருகிறார். விவசாயத்தில் நல்ல வருமானம் ஈட்டும் கார்த்தி, தனது 5 அக்காள்கள் மீதும் அதீத பாசம் கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார். இதற்கிடையே பொன்வண்ணனின் மகளான நாயகி சாயிஷா மீது காதல் கொள்கிறார். 



    ஆனால் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள கார்த்தியின் அக்கா மகள்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் போட்டி போடுகின்றனர். அவர்கள் இருவரையும் விட்டு, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கார்த்தி. 

    வீட்டில் இரு பெண்கள் இருக்க, கார்த்தி வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்ற பிரச்சனையில் பங்காளிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு குடும்பம் இரண்டாக உடைகிறது. இதேநேரத்தில் சாயிஷாவின் முறைமாமனும் கார்த்தியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.



    இவ்வாறாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, காதல் இதையெல்லாம் கார்த்தி எப்படி சமாளித்தார்? கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா? பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கார்த்தி ஒரு சிறப்பான விவசாயியாக, நல்ல தம்பியாக, குடும்ப பொறுப்புள்ள பிள்ளையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், தான் ஒரு விவசாயி என்று மாறுதட்டி சொல்லும் இடங்களிலும் உணர்ச்சிவசப்படுத்துகிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.



    இதுவரை மாடர்ன் பெண்ணாகவே நடித்து வந்த சாயிஷா, இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கார்த்தி - சாயிஷா இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் போட்டி போடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குடும்பத் தலைவனாக சத்யராஜ், வயதான தோற்றத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜி, பானுப்பிரியாவும் ரசிக்க வைத்துள்ளனர். சூரி காமெடியில் திருப்திபடுத்தியிருக்கிறார். 

    இதுதவிர சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி, சவுந்தரராஜன் என ஒவ்வொருவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர். 



    அழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயியின் அருமை, கூட்டுக்குடும்பம், குடும்பத்தின் பலம் என்னவென்பதை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். கல்வி தான் முக்கியம் என்று அனைவரும் வழக்காடும் இந்த சமயத்தில், நான் விவசாயி, என் பெயருக்கு பக்கத்தில் விவசாயி என்று போடுவது தான் பெருமை, அதுவே தனது விருப்பமும் என்று சொல்லும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் விவசாயியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். முதல் பாதி விறுவிறுப்பாக செல்ல, இரண்டாது பாதி பிரச்சனையுடன் சற்றே விறுவிறுப்பு குறைந்து திரைக்கதை நகர்கிறது.

    டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையில் கிராமத்து சாயலுக்கு ஏற்றபடி கிராமத்து கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் இயற்கை நிலங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் துணை. #KadaiKuttySingam #KKS #Karthi #Sayyeshaa

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #KadaikuttySingam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. 
    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த டிரைலரை படத்தின் தயாரிப்பாளரும், கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா வெளியிடுகிறார். படம் வருகிற 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    அண்ணன், தம்பிகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் திரையில் ஒன்றாக இணைந்து நடிக்க விருப்பப்படும் நிலையில், கார்த்தி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kadaikutty Singam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மாட்டுவண்டி பந்தையத்தில் வெற்றி பெறும் கார்த்திக்கு, அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் சூர்யா பரிசு அளிக்கும்படியாக ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். கார்த்திக்கு, சூர்யா வெற்றிக் கோப்பை அளிக்கும்படியான ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. 

    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சாரில் யு சான்றிதழை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜூலை 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் கேரள திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. 
    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் கேரள திரையரங்கு உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம், ஆனால் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம் என்பதை இந்த படம் சொல்கிறது என்று ‘சின்ன பாபு’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா பேசினார். #KadaikuttySingam #Karthi
    சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், சூரி, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இந்த படம் தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-

    “தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பழமொழி உண்டு. கார்த்தியை நான் அப்படித்தான் பார்க்கிறேன். தம்பி கார்த்தியின் வளர்ச்சியும், நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பக்குவமும் எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் என்னை ஆச்சரியப்படுத்தின.



    வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. விவசாயிகளின் சிறப்பையும் பேசுகிறது. இந்த படத்தை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.” இவ்வாறு சூர்யா பேசினார்.

    நடிகர் கார்த்தி பேசும்போது, “விவசாயிகளை பெருமைப்படுத்தும் படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். இந்த படத்தில் நான் விவசாயியாக நடித்து இருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. அதோடு உறவுகளின் முக்கியத்துவத்தையும் படத்தில் காட்சிபடுத்தி உள்ளோம். குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படமாக தயாராகி உள்ளது” என்றார். #KadaikuttySingam #Karthi #Suriya

    கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிப்பதாக கூறினார். #KadaikuttySingam #Karthi
    சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், சூரி, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிவக்குமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, பாண்டிராஜ், ஜான் விஜய், ஸ்ரீமன், பானுப்ரியா, திலீப் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

    இதில் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா நன்றி தெரிவித்து பேசியதாவது, 

    இந்த மாதிரியான கதையை மக்களுக்கு கொண்டு சொல்ல வேண்டும் என்று முயற்சியில் எடுக்கப்பட்ட படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் நடித்துள்ள பலரும் அவர்களது உணர்ச்சியையே கதாபாத்திரத்தில் பிரதிபலித்திருக்கின்றனர். உறவுகளுக்கு மருந்தளிக்கும் படமாக கடைக்குட்டி சிங்கம் நிச்சயமாக இருக்கும். பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம். உறவுகளை மீண்டும் புதுப்பிக்க, பலம் சேர்க்கும் படமாக நிச்சமாக அமையும் என்றார். 



    நடிகர் கார்த்தி பேசும் போது, 

    இயக்குநர் பாண்டிராஜ், படத்தில் மட்டும் விவசாயத்தை உட்புகுத்தாமல், சென்னையிலேயே ஒரு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்த படத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அனைவருக்கும் வித்தியாசமான கதபாத்திரங்களை கொடுத்திருக்கிறார். பட்டணத்திற்கு பிழைக்க சென்றவர்களை மீண்டும் கிராமத்திற்கு அழைக்கும் படம் தான் இது. அதேபோல் சொந்த பந்தங்கள் அழிந்து வருகிறது. சொந்தங்களை நியாபகப்படுத்தும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்றார். 

    படத்தில் தனது கதாபாத்திரம் என்னவோ, அதுவாகவே வந்து சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார். #KadaikuttySingam #Karthi


    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா சய்கல் நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தி கிராம பின்னணியில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம். #KadaikuttySingam #Karthi
    2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. 

    முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, பிரியா பவானி ‌ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பானுப்ரியா சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.



    ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இசை - டி.இமான், கலை - வீரசமர், படத்தொகுப்பு - ரூபன், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, எழுத்து, இயக்கம் - பாண்டிராஜ்.

    “ இந்த படத்தில் கார்த்தி மாதம் ரூ.1½ லட்சம் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். என்ஜினீயர், டாக்டர் போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட் முதல் பல இடங்களில் பெருமையாக எழுதிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.



    இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐ.டி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

    படம் வருகிற ஜூலையில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டி.வி. ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. வாங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கிறது. 



    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    ×